கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டில் இருந்து வெளியேறிய யானைகளிடம் சிக்கிய இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி உயிர் தப்பினார்.
கேரளாவில்அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள்வெளியேறி குடியிருப்புபகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாஜி என்பவர் யானையை கவனிக்கவில்லை. திடீரென்று சற்று அருகில் வந்ததும் யானைகளை கவனித்துள்ளார். யானை துரத்தியபோது இங்கும் அங்கும் ஓடினார். முடியாமல் அங்கிருந்த ஒரு மரத்தில் ஏறி உயிர்தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மரத்தின் மேலிருந்து கூச்சலிட்டதும் பக்கத்து நிலத்தில்இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விவசாயம் செய்து வரும் பகுதியில் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் மரத்தில் இருந்தவர் பத்திரமாக கீழே இறங்கி வந்தார். இந்த வீடியோ தற்போத வைரலாகிவருகின்றது.