fbpx

இளம் வயதில் அயர்லாந்து பிரதமரான சைமன் ஹாரிஸ்; பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற சைமன் ஹாரிஸ்-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் பிரதமராக பதவி வகித்த லியோ வராத்கர் கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களால் பதிவியில் இருந்து விலகினார். அதனைத்தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், சைமன் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக போட்டியிட்டவருக்கு 69 வாக்குகளும் பதிவாகின.

வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் புதிய பிரதமராக 37 வயதே ஆன சைமன் ஹாரிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.  இவர் முன்னாள் சுகாதார மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கொரோனா பேரிடர் காலத்தில் சைமன் ஹாரிஸ் திறம்பட செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிக இளம் வயதில் பிரதமர் பதவியேற்றுள்ள சைமன் ஹாரிஸுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் “சைமன் ஹாரிஸ் அயர்லாந்தின் மிக இளம் வயது பிரதமராக தேவர்வாகி உள்ளதற்கு வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நமது வரலாற்று உறவுகள் உயர்ந்த மதிப்புக்குரியது. இந்தியா – அயர்லாந்து இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Post

BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Wed Apr 10 , 2024
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர், பெயர் மற்றும் […]

You May Like