fbpx

#திண்டுக்கல் :காதல் திருமணம் நடந்த சில நாட்களிலே உடல் கருகி இறந்த இளைஞர்..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள திம்மணநல்லூரில் முத்து என்பவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் சென்ற 7 மாதங்களாக காதலித்து வந்த துர்காதேவி என்ற பெண்ணை வீட்டில் பேசி சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

இந்த நிலையில் சின்னியம்பாளையம் என்ற பகுதியில் இருக்கின்ற கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது முத்து அங்குள்ள நீளமான இரும்பு கம்பி ஒற்றை வளைக்க முயன்றிருக்கிறார்.

இதனையடுத்து திடீரென எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியானது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் பட்டென உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் பற்றி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

#சென்னை: பேருந்து நிலையத்தில் தூங்கி கொண்டிருந்த நபரை இரவோடு இரவாக வெட்டி கொலை..!

Mon Nov 28 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள கிண்டி மற்றும் வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்த பகுதியில் நரிக்குறவர் கார்த்திக் குமார்மற்றும் மனைவி, குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று இரவில் வழக்கம் போல் குடும்பத்துடன் பேருந்து நிறுத்ததில் உறங்கிய நிலையில் காலையில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஏதோ ஒரு பயனியால் கழுத்து அறுபட்ட நிலையில் கார்த்திக் உயிரிழந்துள்ளார்.  இதனை கண்ட கார்த்திக் குமாரின் குடும்பத்தினர் இது பற்றி காவல்துறையினருக்கு […]

You May Like