உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கன்ச் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா. கடந்த வாரம் இவருக்கும் இவரது கணவரான முன்னாவிற்கும் சண்டை ஏற்படவே தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார் சல்மா. தனது மனைவியை சமாதானப்படுத்தி கூட்டிச் செல்வதற்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்த முன்னா மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு மறுத்த அவரது மனைவி சல்மா கணவரிடம் கடும் வாக்குவாதம் செய்து இனி தனது அம்மா வீட்டிற்கு வர வேண்டாம் எனவும் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். ஆனாலும் குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதன் காரணமாக மறுபடியும் தனது மாமியார் வீட்டிற்கு வந்த முன்னாவை பார்த்து கோபமடைந்த சல்மா அவரை சரமாரியாக தாக்கி, அவரது நாக்கை தனது பற்களால் கடித்து துப்பியுள்ளார். இதில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் முன்னா மயங்கி விட்டார். அவரது உறவினர்கள் இவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது மனைவியை காவல்துறை கைது செய்தது.
இதே போன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த நான்காம் தேதியே நடந்திருக்கிறது. வயல் வேலைக்காக இளம் பெண் ஒருவர் வயல்வெளிகளில் சென்று இருந்திருக்கின்றார். அப்போது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென முட்பதற்குள் அவரை இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இருக்கிறார். அந்தப் பெண் எவ்வளவோ கூச்சல் போட்டும் கதறியும் யாரும் வரவில்லை. வெறி கொண்ட அந்த இளைஞர் அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றி அவரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்திருக்கிறார். அப்போது சுதாகரித்துக் கொண்ட அந்த பெண் அவரது ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து முத்தம் தருவது போல அந்த இடைஞ்சலின் அருகில் சென்று இருக்கிறார். அந்த இளைஞரும் ஆசையாக முத்தம் வாங்க வந்தபோதுதான் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முத்தம் கொடுப்பது போல வந்த பெண் தன்னுடைய பற்களால் அந்த இளைஞரின் உதடுகளை கடித்து தப்பிவிட்டார். வலியில் துடித்த அந்த இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் முற்பதற்குள் ஓடிவந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு நடந்த விஷயமே தெரிந்திருக்கிறது. உடனடியாக அந்த இளம் பெண்ணை பத்திரமாக மீட்டார்கள். மேலும் அந்த இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த நபர் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.