முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்வன்ற U19-மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து U19-T20 மகளிர் உலக கோப்பையை வென்றது. ஐசிசி நடத்தும் முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது, மகிழ்ச்சியான செய்தி.