fbpx

“வெளிநாட்டில் போதைப் பொருள் ஏற்றுமதி- உங்களது வங்கிக்கு பணம்” ஆதார் எண்ணை கொடுங்கள்!!! டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்…

சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில்
சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது, சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி செய்யலாம். எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம். சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். எந்த ஒரு வங்கியும் ஓடிபி எண் கேட்பது கிடையாது. எனவே ஓடிபி எண் யாராவது கேட்டால் பகிரக்கூடாது எனவும் இதன் மூலம் தான் குற்றங்கள் நிகழ்கிறது. எனவே ஆசை வார்த்தை கூறுபவர்களின் உண்மைத் தன்மை அறிந்த நாம் விழிப்போடு இருக்க வேண்டும். தமிழகத்தில் சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக 46 காவல்நிலையம் உள்ளது. பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றம் தொடர்காக இந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கலாம் என்று கூறினார்

’அமைச்சர் புகழ்ந்து பேசிய டிஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டருடன் நிர்வாண போஸ்’..!! டிஜிபி அதிரடி உத்தரவு

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு
“தமிழகத்தில் உள்ள எல்லா மக்களிடமும் செல்போன் உள்ளது இன்டர்நெட் இணைக்கப்பட்டுள்ளது எனவே உலகத்தில் உள்ள எந்த நபரும் ம் நம் வங்கியில் உள்ள பணத்தை திருடலாம். வெளிநாட்டில் போதைப் பொருள் ஏற்றுமதி செய்தது தொடர்பாக உங்களது வங்கிக்கு வங்கிக்கு பணம் வந்துள்ளது என்று உங்களுடைய ஆதார் எண் கொடுங்கள் என்று உங்கள் வங்கியில் உள்ள பணத்தை மோசடி செய்யலாம். தற்போது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை எனவே உங்களது மின்சாரம் துண்டிக்கப்படும் என்று கூறி நாங்கள் அனுப்புகிற லிங்கில் பத்து ரூபாய் செலுத்துங்கள் உங்களது மின் கட்டணம் துண்டிக்கப்படாது, மின் இணைப்பை மீண்டும் பெற நாம் அவர்கள் கொடுத்த லிங்கிற்கு பத்து ரூபாய் அனுப்பினால் நமது வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் அவர்கள் எடுத்து விடுவார்கள். அதேபோல் கலெக்டர், டிஜிபி பேசுவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. நம்மை ஏமாற்றுபவர்கள் வெளிநாட்டில் கூட இருக்கலாம். சைபர் குற்றங்களில் ஏமாற்றப்பட்டால் “1930” இந்த எண்ணிற்கு புகார் கொடுக்கலாம் என்றார்.

Kathir

Next Post

ஷாக் நியூஸ்..!! கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அட்மிட்..!! உடல்நிலை கவலைக்கிடம்..?

Thu Dec 1 , 2022
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 82. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான பீலேவுக்கு மருத்துவமனையில் கிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு கிமோதெரப்பி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
ஷாக் நியூஸ்..!! கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அட்மிட்..!! உடல்நிலை கவலைக்கிடம்..?

You May Like