சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 25ஆம் தேதி அன்று காலையில் வீட்டிலிருந்து மளிகை கடைக்கு சென்றிருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பவில்லை என்பதால் பதறிப் போன பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் மகள் இல்லாததால், போலீசில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசா,ர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மறுநாள் இரவு 9 மணிக்கு மாணவி வீடு திரும்பியிருக்கிறார். மகளைக் கண்டதும், மகள் இருந்த கோலத்தைப் பார்த்ததும் பதறியடுத்துக் கொண்டு, எங்கே சென்றாய்? என்ன நடந்தது? என்று விசாரிக்க மளிகை கடைக்கு சென்றபோது , அங்கு வேலை செய்து வரும் வினித், உன் அப்பா உன்னை அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லி பைக்கில் அழைத்துச் சென்றான்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற பின்னர் என்னை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தான். பின்னர் அவனை நண்பர்கள் விக்னேஷ், சீனிவாஸ், அருண்குமார், ஆகாஷ் நான்கு பேரும் வந்தார்கள். 5 பேரும் சேர்ந்து என்னை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்கள். ப்ளீஸ் அண்ணா என்னை விட்டுடுங்க என்று எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் அவர்கள் கேட்கவில்லை. இன்று இரவுதான் வீட்டு அருகே வந்து விட்டு விட்டு சென்று விட்டார்கள். ஐந்து பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்கள் என்று கூறி கதறி இருக்கிறார்.
இது குறித்து அறிந்ததும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்திருக்கிறார். பின்னர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்கள். அதன் அடிப்படையில் 5 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.