fbpx

“ப்ளீஸ்.. விட்டுருங்க..!” கதறிய காதலன்.. தர்ம அடி கொடுத்த பெண்ணின் பெற்றோர்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில், தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் வெளியே இழுத்து, பலமுறை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியான வீடியோவில், அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வருவதை காணலாம். அந்த நபர் வெளியே வந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை தாக்கினர். கூப்பிய கைகளோடு கெஞ்சிய போதும் தாக்குதலை நிறுத்தவில்லை. ஆரம்பத்தில், அந்த நபரை ஒரு திருடன் என்று குடும்பத்தினர் நினைத்தனர். தன் பெண்ணின் காதலன் என அறிந்த பெற்றோர் அந்த நபர் மீது தாக்குதலை தொடர்ந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை குடும்பத்தினரின் பிடியில் இருந்து மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காதலனின் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த பெண் தான் அவனை வீட்டிற்கு அழைத்தாள் என குற்றம் சாட்டினர்.

Read more ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ஆன்லைனின் ஆர்டர் செய்த சாக்லேட் சிரப்பில் இறந்த எலி!! வைரலாகும் வீடியோ!!

English Summary

A video making rounds on social media on Tuesday showed a man, hidden inside a trunk at his girlfriend’s house, being pulled out and slapped repeatedly by the girl’s parents in Uttar Pradesh’s Azamgarh.

Next Post

ஜூன் 21 நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம்...! காங்கிரஸ் அறிவிப்பு...!

Wed Jun 19 , 2024
காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூன் 21 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்ததுஹ தேசிய தேர்வு முகமை மேல் தவறு இல்லை’ என மத்திய கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். தேர்வு […]

You May Like