கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திராவை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்..
கோவை வெள்ளையங்கிரி மலையடிவாரத்தில் சத்குருவின் ஈஷோ யோகா மையம் அமைந்துள்ளது.. இங்கு பிரம்மாண்டமான சிவபெருமான சிலை நிறுவப்பட்டுள்ளது.. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை புரிகின்றனர்.. அந்த வகையில், ஆந்திராவை சேர்ந்த 28 வயதான ரமணா என்ற நபர் மன அழுத்தம் காரணமாக யோகா பயிற்சி மேற்கொள்ள ஈஷா மையம் வந்துள்ளார்..
இந்நிலையில் ஈஷா மையத்தில், ரமணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. தற்கொலை செய்துகொண்ட ரமணாவின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..