fbpx

புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு.. அதீத பயன்பாடு ஆபத்தானது.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

கர்நாடகாவில் புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், மருத்துவர்கள் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்..

புரோட்டீன் பவுடரை சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடற்பயிற்சி ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு இயக்கத்தை தொடங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி, தனது தொகுதியில் புரோட்டீன் பவுடரை உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்..

மேலும் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. அதற்கு பதிலளித்த கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி, சட்ட விரோதமாக புரோட்டீன் பவுடர் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் புர்ரோட்டீன் பாதுகாப்பற்ற நுகர்வு மற்றும் உட்கொள்ளும் அளவை முறையாகக் கண்காணிக்காவிட்டால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்தார். “குறைந்த தரம் மற்றும் பாதுகாப்பற்ற பிற புரதப் பொடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்..

இதனிடையே பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவர் இதுகுறித்து பேசிய போது “ இளைஞர்கள் தங்கள் உடலைக் கட்டமைக்க புரோட்டீன் பவுடரை அதிகமாகப் பயன்படுத்தும் போக்கு ஆபத்தானது. புரோட்டீன் கூடிய அதிகப்படியான உடற்பயிற்சி மிகவும் ஆபத்தானது. இது இரத்த அழுத்தத்தில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இது இதயத் துடிப்பை அதிகரிக்கும். சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.. இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று” என்று தெரிவித்தார்..

மேலும் பேசிய அவர் “ இளைஞர்கள் செய்யும் தவறு என்னவென்றால், அவர்கள் ஜிம்மில் அதிக உடற்பயிற்சியை மேற்கொள்வதும், தங்கள் உடலை விரைவாகக் கட்டமைக்க புரோட்டீன் பவுடர்களை அதிகமாகப் பயன்படுத்துவதும் ஆகும். இது தவறான செயல்.. இதனால் இதயம் மட்டுமல்ல. கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே அந்த நபர் கடுமையான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

உடலைக் கட்டமைக்க இயற்கை உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. மக்கள் தங்கள் உடலைக் கட்டமைக்க சாப்பிடக்கூடிய பல இயற்கை உணவுகள் உள்ளன. சோயா, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற புரதத்தின் பல்வேறு ஆதாரங்கள் இயற்கையாகவே கிடைக்கின்றன.. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை. ஆனால் புரோட்டீன் பவுடர்களில் என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியாது..

மேலும் நடைபயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சியை மக்கள் செய்ய பரிந்துரைக்கப்பட்டாலும், கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது..

Maha

Next Post

தாய்லாந்தில் தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்த தமிழக மாணவி..!! மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை..!!

Wed Sep 21 , 2022
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய – பசிபிக் காதுகேளாதோர் பேட்மிண்டனில், அனைத்து பிரிவுகளிலும் தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா, 6-வது ஆசிய – பசிபிக் காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டியில் 6 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடந்த 14 முதல் 20 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற பேட்மிண்டன் போட்டிகளில் ஜெர்லின் அனிகா இந்த சாதனையைப் […]
தாய்லாந்தில் தங்கப் பதக்கங்களை வாரிக்குவித்த தமிழக மாணவி..!! மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் சாதனை..!!

You May Like