சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ்(52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடன் 2017 ஆம் வருடம் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக கொரட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுவாமிதாசுடன் இருந்த தவறான நட்பின் காரண மாக சுவாமிதாஸ் வீட்டின் பணி பெண்ணாக இருந்த லட்சுமி (32) என்பவர் தன்னுடைய ஆண் நண்பர் முகமது இர்பான்(35) உடன் சேர்ந்து சுவாமிதாசை கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, லட்சுமி முகமது இர்பான் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கு நடுவே சிறையில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் திணையில் வெளியே வந்த முகமது இர்பான் மற்றும் லட்சுமி உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது மேலும் அவர்களை பிடித்ததற்கு பூந்தமல்லி நீதிமன்றம் அரெஸ்ட் வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து சென்ற வாரம் கோவையில் பதுங்கி இருந்த லட்சுமியை கொரட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர் அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கொரட்டூர் காவல்துறையினர் டெல்லிக்கு சென்று அங்கே முகமது இர்பானை கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.