Kumbh Mela: வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பமேளா பக்தர்களை கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று ரூ.5 ஆயிரம் வரை சம்பாதித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. இது, வரும் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கானோர் இங்கு புனிதநீராடி வருகின்றனர்.மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டுள்ளனர்.
தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலர் வெகு தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, கொண்டுவந்து விடுகிறார்கள். இதன் மூலம் அவர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
Readmore: பேஸ்புக் லைவ் வீடியோக்கள் தானாகவே நீக்கப்படும்.. எப்படி சேமிப்பது..? – விவரம் இதோ