fbpx

’20’ நிமிடங்களுக்கு மேல் செயல் இழந்த YouTube.! நடந்தது என்ன.?

இன்று இந்திய நேரப்படி மூன்று மணியளவில் youtube வலைதளம் 20 நிமிடங்களுக்கு மேல் செயல் இழந்திருக்கிறது. இது தொடர்பாக 100 பேர் வரை புகார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் வலைதள ஊடகமான youtube இன்று இந்திய நேரப்படி 3 மணி அளவில் 20 நிமிடங்களுக்கு முடங்கியதாக பல பயனர்களும் புகார் தெரிவித்துள்ளனர். யூடியூப் வலைதளம் சில நிமிடங்கள் முடங்கியதை தொடர்ந்து நிகழ் நேர செயலிழப்பை கண்காணிக்கும் டவுன்டெக்டர் மற்றும் சமூக வலைதளங்களிலும் பல பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

டவுன்டெக்டரின் கூற்றுப்படி, 80 சதவீத பயனர்கள் வீடியோக்களைப் பார்ப்பதிலும் யூடியூப்பில் பதிவேற்றுவதிலும் மதியம் 3 மணிக்குள் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இருப்பினும், யூடியூப்பின் இந்த சிக்கலை இந்திய பயனர்கள் மட்டுமே எதிர்கொள்கிறார்களா அல்லது உலகளாவிய பயனர்கள் எதிர்கொள்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக பயனர்கள் மற்றும் யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்கள் சமூக வலைதளமான X தளத்தில் யூடியூப் தொடர்பான பிரச்சனை பற்றி பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் ஒருவர் யூடியூப் சர்வர் ஜெயலலிதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா.? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவரது குறும்படங்களை யூடியூப் சேனலில் பதிவேற்றிய போது அவரது சேனல் மற்றும் யூடியூப் ஸ்டுடியோவில் எதுவும் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

English Summary: YouTube site is down for 20 mins.. Around 3 pm IST around 100 users facing problem in watching videos and uploading videos.

Read More: SIDHU MOOSEWALA| இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கும் மறைந்த பாடகர் சித்து மூஸ் வாலாவின் பெற்றோர்.!

Next Post

Jayakumar | ’அண்ணாமலை கடை போனியே ஆகாத கடை’..!! கடுமையாக விமர்சித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்..!!

Tue Feb 27 , 2024
அண்ணாமலையின் கடை போனி ஆகாத கடை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் அதிமுகவில் ஐக்கியமாகக் கொண்டுள்ளனர். நாங்கள் பாஜக மாதிரி வலை விரித்து பிடிக்கவில்லை. நேற்று கூட அண்ணாமலை கடை விரித்தார். […]

You May Like