டிக்டாக் மூலம் பிரபலமான திவ்யா கள்ளச்சி, சிறுவர்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும், அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் சித்ரா என்ற யூடியூபர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த், கார்த்திக் ஆகியேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், சித்ரா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, சிக்கா என பல யூடியூபர்களின் நிர்வாண வீடியோக்கள் இருப்பதாகவும், திவ்யா கள்ளச்சியின் போனை ஆய்வு செய்தால், அதில் ஆதாரம் கிடைக்கும் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் திருச்சி சாதனா, ரவுடி பேபி, சிக்கா ஆகியோர் வாட்ஸ் அப்பில், தனியாக ஒரு குரூப் வைத்துக்கொண்டு அதில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ரேட் பேசி வருவதாக கூறியிருந்தார். இதுகுறித்து பேசியுள்ள திருச்சி சாதனா, ”பயில்வான் எதுவும் சரியாக தெரியாமல் பேசக்கூடாது. நேரடியாக அவர் என்னுடன் விவாதிக்க தயாராக இருந்தால் இதற்கு நான் பதில் அளிப்பேன்” என்று பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, யூடியூப் சேனல் ஒன்றில், திருச்சி சாதனா – பயில்வான் ரங்கநாதன் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது பயில்வான் ரங்கநாதன், நைட் 12 மணிக்கு யூடியூப் சேனலில் லைவில் வருவதற்கு என்ன காரணம் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சாதனா, நான் பன்னிரண்டு மணிக்கு லைவ் போட்டதில்லை. நான் 9 மணிக்கு போட்ட வீடியோவை 12 மணிக்கு நீங்கள் பார்த்துவிட்டு என்னை தவறாக பேசக்க்கூடாது.
இந்த வயதிலும் நீங்கள் என்னுடைய வீடியோவை லைவில் பார்க்க அவசியம் என்ன..? இந்த வயதிலும் உங்கள் ரத்த ஓட்டம் கின் என்று இருக்கிறது. 2021இல் சேனல் ஆரம்பித்து 2022இல் வீடியோ, ரீல்ஸ், ஷார்ட்ஸ் என்று பிரபலமாக இருந்தேன். பிறகு, என் தனிப்பட்ட குடும்ப பிரச்சனை காரணமான அனைத்தையும் நிறுத்திவிட்டு, என் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறேன். வீடு இல்லாமல், என் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. நகை எல்லாத்தையும் விற்று வீடு கட்டினேன். இப்போது போட்டு இருக்கும் இந்த நகை, மோதிரம் எல்லாம் கவரிங் தான். எனக்கு மட்டும் 18 லட்சம் கடன் இருக்கிறது.
மேலும், யூடியூபர் சித்ரா கூறியிருக்கும் புகார் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தேவையில்லாமல் இந்த பிரச்சனையில் என்னுடைய பெயரை இழுக்க வேண்டாம். நான் இதுவரை சித்ராவை பார்த்தது கூட இல்லை. இதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியாமல், நீங்களும் வீட்டில் இருக்கும் பெண்கள் பற்றி வாய்க்கு வந்ததை பேசக்கூடாது” என்றார்.