இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் யூடியூப் பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனர்கள் யூட்யூபில் சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோ பதிவுகளை பதிவுகள் மூலம் பணம் சம்பாதிக்கும் நடைமுறை உள்ளது. யூடியூப் சேனல்கள் வைத்திருப் பவர்கள் பணம் சம்பாதிக்க மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை யூடியூப் நிறுவனம் கடைபிடித்து வருகிறது.
ஒரு சேனல் வைத்திருப்பவர் ஒரு ஆண்டில் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணி நேரம், அவர்கள் பதிவேற்றிய காணொளிகளைப் பிறர் பார்த்திருக்க வேண்டும். அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் பதிவேற்றம் செய்பவர்கள் 90 நாட்களில் ஷார்ட்ஸ் காணொளிகள் மூலமாக 10 மில்லியன் பார்வைகளை எட்டியிருக்க வேண்டும். இதுதான் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாகும்.
தற்போது இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதியின் படி, யூடியூப் சேனலுக்கு குறைந்தது 500 சப்ஸ்க்ரைபர்கள் இருந்து, கடந்த 90 நாட்களில் மூன்று காணொளிகள் பதிவேற்றி, அந்த காணொளியை 3000 மணி நேரம் பிறர் பார்த்து அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் வழியாக 3 மில்லியன் பார்வைகளை எட்டி இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.