கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள், சில மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த சில பொருட்களை சூறையாடினர். மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”திமுக ஆட்சியின் ஊழலையும், கையாலாகாத்தனத்தையும் பற்றி பேசுவோர் மீது வழக்கு போடுவது, நள்ளிரவில் போலீசாரை அனுப்பி மிரட்டுவது போன்ற அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது.
திமுக ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத்தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு.
— K.Annamalai (@annamalai_k) March 24, 2025
திமுக அரசு ஊழல்… https://t.co/9jlkWhGsQi
திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது. ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் 3 மணி நேரம் ஆகியும், காவல்துறையினர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.