fbpx

யூசுப் பதான் முதல் இக்ரா சவுத்ரி வரை!! கெத்தாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய போகும் 24 முஸ்லிம் எம்.பி.க்கள்!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், இக்ரா சவுத்ரி உள்பட 24 இஸ்லாமிய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான், அசாதுதீன் ஒவைசி, இக்ரா சவுத்ரி உள்பட 24 முஸ்லிம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 115 முஸ்லிம் வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 78 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய யூசுப் பதான், மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை வீழ்த்தி சிறப்பான வெற்றியை நிலைநாட்டியுள்ளார். அதேபோல உத்தரப் பிரதேசம் சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சமாஜ்வாதி கட்சியின் இக்ரா சவுத்ரி, பாஜகவின் பிரதீப் குமாரை 69,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தென்னிந்தியாவில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர் மாதவி லதாவை தோற்கடித்து தனது ஹைதராபாத் கோட்டையை தக்க வைத்துக் கொண்டார். லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா, காங்கிரஸின் ஜம்யாங் சிங் நாம்யாலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் எம்.பி.க்களின் முழுப் பட்டியல்

காங்கிரஸ்

துப்ரி: ரகிபுல் ஹுசைன்
கிஷன்கஞ்ச்: முகமது ஜாவேத்
கதிஹார்: தாரிக் அன்வர்
வடகரை(3): ஷாபி பரம்பில்
சஹாரன்பூர்(1): இம்ரான் மசூத்
மல்தஹா தக்ஷின்(8): இஷா கான் சவுத்ரி
லட்சத்தீவு(1): முஹம்மது ஹம்துல்லா சயீத்

சமாஜ்வாதி கட்சி

கைரானா(2): இக்ரா சவுத்ரி
ராம்பூர்(7): மொஹிப்புல்லா
சம்பல்(8): ஜியா உர் ரெஹ்மான்
காஜிபூர்(75): அஃப்சல் அன்சாரி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி

ஜாங்கிபூர்(9): கலிலூர் ரஹாமான்
பஹரம்பூர்(10): பதான் யூசுஃப்
முர்ஷிதாபாத்(11): அபு தாஹர் கான்
பசிர்ஹத்(18): எஸ்கே நூருல் இஸ்லாம்
உலுபெரியா(26): சஜ்தா அகமது

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

மலப்புரம்(6): இ.டி. முகமது பஷீர்
பொன்னானி(7): டி.ஆர். எம்.பி அப்துஸ்ஸமது சமதானி
ராமநாதபுரம் (35): நவாஸ்கனி

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்(AIMIM)

ஹைதராபாத்(9): அசாதுதீன் ஒவாய்சி

பாரமுல்லா(1): அப்துல் ரஷித் ஷேக்
லடாக்(1) முகமது ஹனீபா

தேசியவாத காங்கிரஸ் கட்சி

ஸ்ரீநகர்(2): ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி

அனந்த்நாக்-ராஜௌரி(3): மியான் அல்தாஃப் அஹ்மத்

Read More: மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!

Baskar

Next Post

யுபிஎஸ்சி என்டிஏ 2 ஆட்சேர்ப்பு விண்ணப்பம்!! திருத்தம் மேற்கொள்ள புதிய வசதி!! எந்த இணையதளத்தில் தெரியுமா?

Thu Jun 6 , 2024
UPSC NDA 2 ஆட்சேர்ப்பு 2024: upsc.gov.in இல் விண்ணப்பத் திருத்தம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு அகடமியில்(NDA) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளது.ஏற்கெனவே பதிவு செய்த விண்ணப்பங்களை எப்படி திருத்தலாம் என்பது குறித்து விரிவாக […]

You May Like