ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக அறிமுகமானவர் ரமணியம்மாள் இவருக்கு ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்ற பெயரும் உண்டு. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பாக இவருடைய நாட்டுப்புறப் பாடல் வரிகள் பலரின் நெஞ்சங்களை கவர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர் தமிழில் வெளியான காத்தவராயன் திரைப்படத்தின் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2 நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய நிலையில், அவர் வயது மூப்பு காரணமாக, இன்று மரணம் அடைந்திருக்கிறார். அவருடைய மரணத்திற்கு பல பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.