உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதிக பணியமர்த்தல், நிச்சயமற்ற உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்பட்ட வலுவான பின்னடைவு ஆகியவை காரணமாக வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அந்த வகையில் பெருமளவிலான பணிநீக்கங்கள் 2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வருகிறது.. அந்த வகையில், Zoom நிறுவனம், 1,300 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.. கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு, உலகளவில், வீடியோ சேவைகளுக்கான தேவை குறைந்துவிட்டதால், சுமார் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகக் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது…
Zoom நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த சில ஆண்டுகளாக, Zoom நிறுவனம் மற்றும் தனிநபர்களுக்கான இன்றியமையாத இணைப்பாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டாகவும் மாறியுள்ளது. நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே இந்நிறுவனத்தில் இருந்திருந்தாலும் அல்லது சமீபத்தில் எங்களுடன் சேர்ந்திருந்தாலும், இதில் முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். நமது பரிணாம வளர்ச்சி, இன்றைய அறிவிப்பை மிகவும் கடினமாக்குகிறது. நமது குழுவை தோராயமாக 15% குறைக்க முடிவு செய்துள்ளோம்.. சுமார் 1,300 கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்களிடம் விடைபெற உள்ளோம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம்.. ஆனால் இது ஒரு அவசியமான முடிவு..
“இது கேட்பதற்கு கடினமான செய்தி என்று எனக்குத் தெரியும்.. அடுத்த 30 நிமிடங்களில் உங்கள் ஜூம் மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார சம்பளம் மற்றும் சுகாதார பாதுகாப்புடன் ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்…
மேலும் வரும் நிதியாண்டில் தனது ஊதியத்தில் 98 சதவீத ஊதியத்தை குறைக்க போவதாகவும், போனஸை தவிர்க்கப்போவதாகவும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ வரவிருக்கும் நிதியாண்டுக்கான எனது சம்பளத்தை 98% குறைக்கிறேன், மேலும் எனது கார்ப்பரேட் போனஸையும் தவிர்க்கிறேன்… எனது நிர்வாகத் தலைமைக் குழுவின் உறுப்பினர்கள் வரும் நிதியாண்டில் அவர்களின் அடிப்படைச் சம்பளத்தை 20% குறைப்பார்கள், அதே நேரத்தில் அவர்களின் FY23 கார்ப்பரேட் போனஸையும் இழக்க நேரிடும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
2020 அக்டோபருடன் ஒப்பிடுகையில், தொற்றுநோய் ஏற்றம் மறைந்ததன் காரணமாக, ஜூம் வீடியோவின் பங்குகள் சுமார் 90 சதவீதமாக குறைந்தன என்பது குறிப்பிடத்தக்கது..