பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார் கதவை திறக்கும் படி கூறினர்.. ஆனால் சவுக்கு சங்கர் கதவை தாளிட்டு உள்ளே இருந்து கொண்டு கதவை திறக்காகாதால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கைது செய்தனர்.. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்..
அவதூறாக பேசி தன்னிட்டம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறித்துவிட்டதாக ஆயிஷா சாதிக் புகார் அளித்திருந்தார்.. கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆயிஷா சாதிக் புகார் அளித்த நிலையில் தற்போது சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்..
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும், ‘சவுக்கு’ வலைதளத்தை தொடங்கி, அரசியல் முக்கியஸ்தர்களின் ஊழலை அம்பலப்படுத்தும் பல அறிக்கைகளை வெளியிட்டார். சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன், அவர் பேசுபொருளாக மாறினார். அதேபோல், யூடியூப்பில், அவர் நடத்திய நேர்காணல்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. வீடியோக்களுக்கான பார்வைகளும் அதிகரித்தன. தனது சவுக்கு யூடியூப் சேனலில் அவர் பல்வேறு அரசியல் கட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : சிவனும், முருகனும் இந்துக் கடவுளா? என்னுடன் விவாதிக்க தயாரா? சீமான் ஆவேசம்.!



