கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 13 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது.. பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.. சுமார் 100 சவரன் நகைகளுக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. நேற்றிரவு முழுவதும் அப்பகுதியில் இருந்த சிசிடிடி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போது கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து குனியமுத்தூர் நோக்கி சென்றது தெரியவந்தது.. இதையடுத்து குனியாமுத்தூர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.. அவர்கள் சுகுணாபுரம் அருகே வீடு ஒன்றில் பதுங்கி இருந்தது தெரியவந்தது..
இதையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.. அப்போது காவல்துறையினரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற போது காவல்துறையினர் அவர்களின் காலில் சுட்டு பிடித்தனர்.. சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேரையும் காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. அவர்கள் 3 பேரும் வட மாநிலத்தவர்கள் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த கொள்ளை சம்பவம் தொடப்ராக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



