பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல கணேசன் காலமானார்.. அவருக்கு வயது 80. அண்மையில் தனது சென்னை வீட்டில் படியில் இருந்து விழுந்ததில் இல. கணேசனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.. கடந்த சில நாட்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்..
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழ்நாட்டு பாஜகவில் அதிகம் நேசிக்கப்பட்ட தலைவராகவும் இல. கணேசன் இருந்தார்.. கண்ணியமான பேச்சுக்கும் அறியப்பட்டவர் இல. கணேசன். பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்..
தமிழ்நாட்டில் பாஜகவை கடை கோடிக்கும் சென்று சேர்த்தவர் கணேசன்.. பாஜக தேசிய செயலர், தேசிய துணை தலைவர், தமிழ்நாடு தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர்.. 2021-ம் ஆண்டு ஆக.27-ல் மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் பொறுப்பேற்றார்.. பிப்.2023 வரை அவர் பணியாற்றினார்.. இடையே 2022, ஜூலை 18 முதல் நவம்பர் 17 வரை மேற்கு வங்க மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.. 2023 பிப்ரவரி 20 முதல் நாகாலாந்து மாநில ஆளுநராக இல. கணேசன் பொறுப்பு வகித்து வந்தார்..
தஞ்சையில் பிறந்த அவர் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தின் ஆளுநராக திறம்பட பணியாற்றி வந்தார்.. இந்த நிலையில் அவரின் மறைவு செய்தி அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..