Breaking | மாணவர்கள் செம ஹேப்பி.!! பள்ளிகள் திறப்பு தேதி குறித்து அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாா்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத்தோ்வு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தத் தோ்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதி முடிக்கப்பட்டு ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விட திட்டமிட்டிருந்தது.

இதற்கிடையே, 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப்ரல் 10, 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில், இறுதித் தோ்வுகள் ஏப்.23ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு நேற்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்தார். இதனால், மற்ற மாவட்டங்களிலும் அதே தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Read More : மாணவர்களே..!! மீண்டும் பள்ளிகள் எப்போது திறப்பு..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!!

Chella

Next Post

சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டில் புது உச்சம் தொட்ட தமிழ்நாடு!

Thu Apr 25 , 2024
தொழிற்சாலைகளில் அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சராசரியாக பயன்படுத்தும் மின்சார அளவை விட தமிழகத்தில் சூரிய மின்சாரம் அளவு தினசரி அதிகரித்துள்ளது என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. தமிழ்நாடு நேற்று (23-ஏப்ரல்-2024) சாதனை அளவிலான 40.50 MU சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது 13-மார்ச் – 2024 அன்று பதிவு செய்யப்பட்ட 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இதேபோல், நேற்றைய தின […]

You May Like