சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசியர்கள் இயக்கம் சார்பில் சென்னையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வித்துறை தலைமை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், சேப்பாக்கம் எழிலகம், கடற்கரை சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என வெவ்வேறு இடங்களில் இடை நிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்..
இந்த நிலையில், இடைநிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஆசிரியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது பேசிய அவர் “ ஆசிரியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். பொங்கல் தினத்தில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிக்கிறது முதலமைச்சர் தெரிவித்தார்.. பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் மேலும் ரூ.2,500 உயர்த்தப்படுகிறது.. அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை.. பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.. மத்திய அரசின் நிதி வந்தால் கேட்காமலே செய்திருப்போம்..” என்று தெரிவித்தார்..
Read More : ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், வட்டி மட்டுமே ரூ. 44,995 கிடைக்கும்..! போஸ்ட் ஆபிஸின் அசத்தல் திட்டம்..!



