BREAKING| கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து..!! 5 மாணவர்கள் பலி..?

accident 2

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: அஜித்குமார் கொலை.. தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. சீமான் அதிரடி..

Next Post

14 நாடுகள் மீது 40% வரி விதிப்பு!. அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம்!. டிரம்ப் சூசக அறிவிப்பு!. எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி?

Tue Jul 8 , 2025
ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் மீது 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள டிரம்ப், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ் மீது அதிகபட்சமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பற்றிய தகவல்களை டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் […]
17395020761064972 aptopix trump modi 75176 1

You May Like