Breaking : ஒரே நாளில் 2 முறை சரிவு..! ரூ.1,440 குறைந்த தங்கம் விலை..! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இன்று காலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 குறைந்துள்ளது.. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1,440 விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும் மாலையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.. அதன்படி ஒரு கிராம் ரூ.265க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது..

Read More : டீசல் விநியோகம் குறித்து மத்திய அரசின் முக்கிய முடிவு.. கட்டணங்களில் பெரும் குறைப்பு.. மே 1 முதல் அமல்..!

RUPA

Next Post

உச்சக்கட்ட பதற்றம்..! இஸ்ரேலுக்கு 6,500 டன் ஆயுதங்கள்.. ஈரானுக்கு எதிரான டிரம்பின் ரகசியப் போர் திட்டம்..!

Fri May 1 , 2026
மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் மீது மீண்டும் போரின் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரானுடனான தற்போதைய பதற்றங்களை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகவும் முக்கியமான மற்றும் தீவிரமான இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. ‘Axios’ வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, வியாழக்கிழமையன்று, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) மூத்த அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்து, ஈரானின் மீதான தாக்குதல்களுக்கான சமீபத்திய உத்திகளை விளக்கினர். சுமார் […]
Trump warning to iran

You May Like