தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.. வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர்..
இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த நிலையில் விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..
இதனிடையே தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர் ஆகியோர் தவெக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.. அப்போது விஜய் குறிப்பிட்ட நேரத்திற்கு களத்திற்கு வர வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.. அனுமதி கேட்ட நேரத்திலேயே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளன
இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக தரப்பில் 3000 நபர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3000 பேருக்கு இடம் போதாது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பு அறிவுறுத்தி உள்ளது.. 3000 பேர் கூடும் அளவுக்கு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் அங்கு கள ஆய்வு செய்து பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து தவெக நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர்..



