Cancer: அதிர்ச்சி!… பிரிட்டன் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு!

Cancer: பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத்மிட்டில்டன் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்மிட்டில்டன். இவருக்கு வயது 42. கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார்.

வீடியோவில், “எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சி அளித்தது.

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன்” என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

Readmore: கோவையில் ஸ்டாலினே வந்து முகாமிட்டாலும், சரித்திர ஓட்டு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெறும்!… Annamalai விளாசல்!

Kokila

Next Post

Tax: காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த சிக்கல்... மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்...!

Sat Mar 23 , 2024
வங்கி கணக்கு முடக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் வருமான வரித் துறையால் முடக்கப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதுடன் ரூ.210 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டிருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது. […]

You May Like