உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரயீஸ் அகமது மற்றும் அவரது மனைவி சித்தாரா, 45 வயது அனீஷ் என்ற நபரை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, அனிஷ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரயீஸ் அகமதுவின் மனைவி சித்தாராவுக்கு தவறுதலாக ரீசார்ஜ் செய்துள்ளார். அதன் மூலம் இருவருக்கும் நட்பு வளர்ந்துள்ளது. பின்னர் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி, பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் சமூக அவமானத்திற்கு ஆளான தம்பதியினர், அவரைக் கொல்ல திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு, தம்பதியினர் அனிஷை லக்ஷ்மங்குஞ்ச் அஷர்ஃபி சவுக்கில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை ஸ்க்ரூடிரைவர் மற்றும் இடுக்கி பயன்படுத்தி கொடூரமாக தாக்கினர். அவரது பற்களை இடுக்கி மூலம் பிடுங்கி, கால்களை ஸ்க்ரூடிரைவரால் குத்தினர். பின்னர் அவரது வீட்டின் அருகே உடலில் காயங்களுடன் அவருக்கு உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்ததாக தெரிவித்தனர்.
இறப்பதற்கு முன்பு, ரயீஸ் அகமது மற்றும் அவரது மனைவி சித்தாரா தன்னை வீட்டிற்கு அழைத்து தாக்கியதாக அனிஷ் போலீசாரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே உயிரிழந்த இளைஞனின் குடும்பம், தம்பதியினர் கொடுக்க வேண்டிய ₹7 லட்சம் கடனுக்காக கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் தந்தை முஸ்தகிம், “அவரது கைகளும் கால்களும் உடைக்கப்பட்டன, ஆடைகள் கழற்றப்பட்டன. மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அனீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் கடனை கேட்டுக்கொள்ள தம்பதியினரின் வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் தகாத உறவே கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. கணவன் மனைவியால் இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?