பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை தொடங்கியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு சிம் எனப்படும் சந்தாதாரரின் அடையாளங்கள் பதியப்பட்ட சிம் கார்டுகளின் சேவை செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியதாக அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவைகள், இதற்கான வசதிகளுடன் கூடிய மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்தச் சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-சிம் சேவையை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள பிஎஸ்என்எல் நுகர்வோர் சேவை மையத்தை அணுகி கேஒய்சி உட்பட தேவைப்படும் அனைத்து நடைமுறையையும் பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு க்யூஆர் ஸ்கேன் செய்வதன் மூலம் இந்த இ-சிம் சேவையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்.