ரூ.251 விலையில் மாணவர்களுக்கான சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.
மாணவர்களின் கல்வித் தேவைக்காக அதிவேக இணைப்புடன் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன், குழந்தைகள் தினத்தையொட்டி ரூ.251 விலையில் சிறப்பு டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் தொடங்கியுள்ளது.இந்த சிறப்புத் திட்டம் 100 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பில்லாத அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திகள் ஆகியவற்றுடன் 28 நாட்கள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்தச் சலுகை 2025 நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை கிடைக்கும்.
இந்த முன்முயற்சியின் மூலம் 28 நாட்களுக்கு பிஎஸ்என்எல் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள 4ஜி மொபைல் நெட்வொர்க் அனுபவத்தை மாணவர்கள் பெறுவதோடு தடையில்லா தகவல் தொடர்பை பெறலாம். இணையம் வழியாக கற்றல், ஆய்வு செய்தல் போன்றவற்றுக்கு மாணவர்களுக்குத் தேவைப்படும் டேட்டாவை குறைந்த செலவில், பெறுவதற்கு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் குறித்த மேலும் விவரங்களை அறிய பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலியைப் பயன்படுத்தலாம். அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையத்தை அல்லது அதிகாரம் அளிக்கப்பட்ட முகவரை அல்லது விற்பனை முனையங்களை அணுகலாம். 1800-180-1503 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்



