ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் பஸ் ஸ்டிரைக்..!! அண்ணா தொழிற்சங்கம் அறிவிப்பு..!!

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது, “போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாகமாக இருக்கிறீர்கள்? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்” என தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது,” உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று ஜனவரி 19ஆம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. நாளை முதல் பணிக்கு திரும்புவதாக போக்குவரத்து சங்கத்தினர் ஐகோர்ட்டில் தெரிவித்தனர். அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என போக்குவரத்துக் கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜனவரி 19ஆம் தேதி அரசு சார்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், ஜனவரி 20ஆம் தேதி முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம். அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் நாளை முதல் பணிக்கு செல்வார்கள் என தெரிவித்தார்.

Chella

Next Post

சிவப்பு கொய்யா பழத்தில் இவ்வளவு நன்மைகளா.! என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.?!

Wed Jan 10 , 2024
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிவப்பு கொய்யாவில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சிவப்பு கொய்யாவை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய்களை தீர்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சிவப்பு நிற கொய்யாவில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ, பி 3, பி 6, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதால் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், சரும […]

You May Like