Business | நீங்க சொந்தமா கடை வெச்சி தொழில் பண்றீங்களா..? இந்த வேலையை உடனே முடிங்க..!! இல்லைனா அபராதம் தான்..!!

வணிக நிறுவனங்களில், தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் வைக்க விரும்பினால், தமிழில் பெரியதாகவும், அடுத்து ஆங்கிலத்திலும், இறுதியாக விருப்ப மொழியிலும், 5:3:2 என்ற விகிதத்தில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துகள் இடம் பெறவில்லை.

கடந்த மாதம், தொழிலாளர் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், வணிகர்கள் இதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர். இதுகுறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், ஏப்ரல் மாதத்திற்கு பின் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அதன்பிறகும் வைக்காவிட்டால், வணிக நிறுவனங்களுக்கான உரிமத்தை ரத்து செய்வது குறித்தும் அரசு முடிவெடுத்துள்ளதை மாவட்டந்தோறும் விளக்கி வருகிறோம். என்றாலும் தற்போது ஆன்லைன் வியாபாரத்தால் மளிகை, துணி உள்ளிட்ட கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாகவும், அதனால் புதிதாக பெயர்ப்பலகை வைக்கும் செலவை சமாளிக்க முடியாமல் உள்ளதாகவும் பல வணிகர்கள் கூறியுள்ளனர். மேலும், மே மாதத்தில் வணிகர் சங்க மாநாடு நடக்க உள்ளதால் பலர் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனாலும் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.

Read More : Food | புகாரளித்த 48 மணி நேரத்திற்குள் ஆக்‌ஷன்..!! புதிய செயலியை உருவாக்கிய தமிழ்நாடு அரசு..!! ஓட்டல் உரிமையாளர்களே உஷார்..!!

Chella

Next Post

Election Bond: லாட்டரி மார்டினின் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,368 கோடி நன்கொடை...!

Fri Mar 15 , 2024
லாட்டரி’ மார்டினின் நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ரூ.1,368 கோடி நன்கொடை கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ.1 லட்சம், […]

You May Like