தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) 2024-25 ஆம் ஆண்டில் 12 லட்சத்திற்கும் அதிகமான தனியார் துறை சந்தாதாரர்கள் சேர்க்கையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது, மார்ச் 2025 க்குள் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 165 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா திட்டம், செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்துள்ளது. என்பிஎஸ் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் இரண்டிற்குமான நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் 2024-25 ஆம் ஆண்டில் 23 சதவீதம் அதிகரித்து மார்ச் 2025 இறுதிக்குள் ரூ .14.43 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது.
இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமான அடல் ஓய்வூதிய திட்டம், குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் உள்ள குடிமக்களுக்கு முதியோர் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மே 9, 2015 அன்று தொடங்கப்பட்டது. அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், சந்தாதாரர் இந்திய அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மூன்று சலுகைகளைப் பெற தகுதியுடையவர், அதாவது 60 வயதிலிருந்து வாழ்நாள் முழுவதும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவார்.
இது அவர்களின் பங்களிப்புகளைப் பொறுத்து, இது APY இல் சேரும் வயதைப் பொறுத்து மாறுபடும். சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு சந்தாதாரரின் மனைவிக்கு அதே ஓய்வூதியம் வழங்கப்படும், மேலும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்தால், சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதியச் சொத்து பரிந்துரைக்கப்பட்டவருக்குத் திருப்பித் தரப்படும்.