fbpx

உற்பத்தி குறியீடு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரிப்பு…! மத்திய அரசு தகவல்..!

எட்டு முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 டிசம்பரில் 3.8 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு உற்பத்தி துறைகள் 2023 டிசம்பர் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை விகிதத்தை பதிவு செய்துள்ளது

இந்த எட்டு முக்கிய தொழில்துறைகள் மொத்த உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன. செப்டம்பர் 2023-ம் ஆண்டுக்கான எட்டு முக்கிய தொழில்துறைகளுக்கான உற்பத்தி குறியீடுகளின் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.

Vignesh

Next Post

முடிவுக்கு வந்த முதல்வர் பஞ்சாயத்து..!! நள்ளிரவில் அழைப்பு விடுத்த ஆளுநர்..!! பதவியேற்கும் சம்பாய் சோரன்..!!

Fri Feb 2 , 2024
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த அமலாக்கத்துறை, 10 முறை சம்மன் அனுப்பியபோதும், ஹேமந்த் சோரன் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையே, நேற்று முன்தினம் ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், 7 மணி நேர விசாரணைக்குப் […]

You May Like