fbpx

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்…! மத்திய அரசு புதிய ஒப்பந்தம் கையெழுத்து…!

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்வரூப் குமார் சாஹா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

பஞ்சாப் & சிந்து வங்கி மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு ஈடாக எந்தவித அடமானமும் இல்லாமல், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் கடன்களை வழங்குகிறது. வேளாண் துறையில் ரூ.75 லட்சம் வரையிலும், இதர பிரிவினருக்கு ரூ.5 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

மின்னணு மாற்றத்தக்க சேமிப்புகிடங்கு ரசீதுகளுக்கு எதிராக நிதி திரட்டுவதற்கான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் வேளாண் பிணைய நிதியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர, வைப்புத் தொகையாளர்களுக்கு நன்மைகள் குறித்த தகவல்களை வழங்குவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்...! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Feb 10 , 2024
பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். 5 ஆண்டு பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கு […]

You May Like