மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில், பொருளாதாரத்தில் பிந்தங்கிய பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் சமிபத்தில் 200 அதிகரித்தது மத்திய அரசு. அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேலும் ரூ.100 மானியம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இத்திட்டத்தில் விநியோகிக்கப்படும் சிலிண்டரில் விலையில் ரூ.300 குறைத்து வழங்கப்படும்.
உஜ்வாலா திட்டத்தில் 14.2கிலோ சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.703 ஆக உள்ளது. மானிய விலையில் ரூ.100 உயர்த்திய நிலையில், இனி ரூ.603 வழங்கப்படும். பொது சந்தையில் சிலிண்டரின் விலை ரூ.903 ஆக உள்ளது. 300 ரூபாய் துணையை மானியமாக மத்திய அரசு வங்கி கணக்குகளுக்கு நேரடியாக செலுத்துகிறது. உங்கள் வங்கி கணக்குகளுக்கு வழங்கப்படும் மாநில தொகையை எவ்வாறு கண்டறிவது என்பதை பார்க்கலாம்.
ஆண்டுக்கு குடும்ப வருமானம் 10 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் இந்த தொகை பெற தகுதியானவர்கள். உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்ததா என்பதை அறிய http://mylpg.in/ என்ற இணையதளத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட LPG ஐடியை பதிவிட்டு, சரிபார்க்கலாம். அல்லது ID தெரியவில்லை என்றால் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி ID யை தெரிந்து கொண்டு பின்னர் உங்களது மானியத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை சரி பார்த்துக்கொள்ளலாம்.