fbpx

காதலர் தினம்..!! அதிரடி சலுகையை அறிவித்த ஃபிளிப்கார்ட்..!! 2 சினிமா டிக்கெட்டுகள் இலவசமாம்..!!

காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஈ-காமர்ஸ் வலைதளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில், பிரபல முன்னணி நிறுவனமான ஃபிளிப்கார்ட், காதலர் தினத்தை முன்னிட்டு தனது பயனர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகிறது.

நீங்கள் 2 திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாக பெற விரும்பினால், ரூபாய் 800 மதிப்புள்ள தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), அழகு பராமரிப்பு (பியூட்டி கேர்) (அ) சாக்லேட் வாங்க வேண்டும். இலவச டிக்கெட்டுகளை பெறுவதற்கு பயனாளர்கள் 800 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 14ஆம் தேதி இரவு வரை இச்சலுகை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூப்பனை பெற்ற பின் ஏப்ரல் 30ஆம் தேதி வரை அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Chella

Next Post

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்..!! வரும் 24ஆம் தேதி விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Fri Feb 10 , 2023
பிப்ரவரி 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான விழா வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, மறுநாள் 19ஆம் […]

You May Like