priya mani: 75 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கிய முத்தழகு!… கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ..!

priya mani: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள பருத்திவீரன் பிரபலம் பிரியாமணி, அதனை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பருத்திவீரன்’ படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. இப்போது திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டி ஆகியுள்ளவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்துகிறார். இதுமட்டுமல்லாது, வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் பிரியாமணி. சமீபத்தில் ஷாருக்கானுடன் இவர் நடித்த ‘ஜவான்’ படம் ஹிட் ஆனது. அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ’ஆர்ட்டிக்கிள் 370’ மற்றும் ’பாமகலாபம் 2’ உள்ளிட்ட படங்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து அவருடைய படங்கள் ஹிட் ஆகி வரும் நிலையில், அதைக் கொண்டாடும் விதமாக புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் பிரியாமணி. தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று சொகுசு காரை வாங்கியுள்ளார். மெர்சடைஸ்- பென்ஸ் ஜிஎல்சி எனும் அந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ. 75 லட்சம் என்று கூறப்படுகிறது. கார் வாங்கியதும் ஷோ ரூமில் கேக் வெட்டி குடும்பத்துடன் பிரியாமணி கொண்டாடி இருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

English Summary: jawan actress Priyamani celebrating buying an expensive luxury car with her family by cutting a cake is going viral on social media.

Readmore: ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க கேக்..!! பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ’தி லெஜண்ட்’ பட நடிகை..!!

Kokila

Next Post

Tripura: அக்பர், சீதா விவகாரம்!…. பெயர் வைத்த வன அதிகாரி சஸ்பெண்ட்..!

Tue Feb 27 , 2024
Tripura: மேற்குவங்கம் சலிகுரி உயிரியல் பூங்காவில் இரு சிங்கங்களுக்கு ‛‛அக்பர் ,சீதா” என பெயரிட்ட வன அதிகாரியை சஸ்பெண்ட் செய்து திரிபுா அரசு உத்தரவிட்டுள்ளது. திரிபுரா மாநிலத்தில் செபாஜிலா என்ற உயிரியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்கம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு பிப்.12-ம் தேதி ஆண், பெண் என 2 சிங்கங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதில் ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ எனவும், பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டு […]

You May Like