இந்த பரிகாரம் செய்தால் உங்கள் கடனை ஈசியாக அடைக்கலாம்..!! ஒரு எலுமிச்சை மட்டும் போதும்..!!

இன்றைய சூழலில் கடன் வாங்குவது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது. கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். யாரும் வேண்டுமென்று கடன் வாங்குவதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையால், கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இன்று வட்டி தொழில் தான் சிறப்பாக நடந்து வருகிறது. எந்த நேரத்திலும் கடன் கிடைத்து விடுவதால், ஒரு சிலர் எதை பற்றியும் யோசிக்காமல் கடன் வாங்கி செலவு செய்கின்றனர். ஆனால், அதை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் மீண்டும் ஒரு கடன் வாங்கி அதை அடைகின்றனர். இவ்வாறு ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று வாழ்க்கையே கடனில் மூழ்கி விடுகிறது.

எனவே, லட்சக்கடனை அடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு எளிய பரிகாரத்தை வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளி அன்று செய்து வர வேண்டும். இதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை உங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் மற்றும் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்பது குறித்து மனதில் ஒருமுறை சொல்லிக் கொள்ள வேண்டும்.

பிறகு வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கையில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை 2ஆக நறுக்கி தலையில் இருந்து பாதம் வரை பிழிந்து விடவும். பிறகு எலுமிச்சம் பழத்தின் தோலை தூக்கி எரிந்து விட வேண்டும். பின்னர் தலைக்கு குளித்திவிட வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை எலுமிச்சம் பழத்தை தலை முதல் பாதம் வரை தேய்த்து குளித்து வந்தால் கடன் தீர வழி பிறக்கும்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

முதல்முறை ஓட்டு போடபோறீங்களா..? கட்டாயம் இதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க..!

Fri Apr 19 , 2024
இன்று ஓட்டுபோட போகும்போது இதையெல்லாம் கண்டிப்பாக ஃபாலோ பண்ணுங்க..! நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்குகிறது. வாக்களிப்பது என்பது ஒரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். எனவே முதல்முறை வாக்களிக்கும்போது, ஒரு வாக்காளராக நீங்கள் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா […]

You May Like