CAA: விஜய்க்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு!… பாஜகவுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்?

CAA: தமிழ்நாட்டில் திமுக வை பார்த்து CAA சட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்று சொல்லும் விஜய், இந்த சட்டத்தை செயல்படுத்திய பாஜக வுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆவணமற்ற முஸ்லீம் அல்லாத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை கடந்த 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதை ஒரு சட்டமாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இதற்கான விதிகளை நேற்று (மார்ச் 11) மத்திய அரசு வெளியிட்டுள்ளது . மத்திய அரசு, சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி இருப்பதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (சிஏஏ) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசு பற்றி ஒரு வார்த்தை இல்லையே: விஜய்யின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ள அதே சமயத்தில், விஜய் மத்திய பாஜக அரசை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. குடியரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசை ஒப்புக்கு கூட விமர்சிக்காமல் மேலோட்டமாக விஜய் அறிக்கை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிஏஏ-வை தமிழகத்தில் கால் வைக்கவிடமாட்டோம் என்பது உள்ளிட்ட எதிர்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துவருகிறது. இதன் விதிகள் அமல்படுத்திய சிறிதுநேரத்திலேயே முதலமைச்சர் ஸ்டாலின், காட்டமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019-ஐ, ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றியதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தான் மத்திய அரசை விமர்சிக்காமல், மாநில ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் விஜய் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு தவிர்த்து மற்ற மாநிலங்களில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உங்களுக்கு சம்மதமா? என நெட்டிசன்கள் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் திமுக வை பார்த்து CAA சட்டத்தை அமல் படுத்தக் கூடாது என்று சொல்லும் விஜய், இந்த சட்டத்தை செயல்படுத்திய பாஜக வுக்கு ஒரு சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Readmore: DMK: அண்ணாமலை முடிவுக்காக காத்திருக்கும் திமுக!… இந்த தொகுதியில் நேரடியாக களமிறங்க திட்டம்!

Kokila

Next Post

Cauvery: நாங்கள் என்ன முட்டாள்களா?… தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது!… கர்நாடகா பிடிவாதம்!

Tue Mar 12 , 2024
Cauvery: பெங்களூருவில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக காணொளி காட்சி மூலம் நடைபெறும் நிலையில் இம்முறை […]

You May Like