பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் இதோ இந்த எண்ணுக்கு அழையுங்கள்…

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் குறுகிய தூரத்திற்கே அதிக அளவு கட்டணம் கேட்பார்கள் அவ்வாறு கேட்டால் ,இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் .

பெங்களூருவில் புதிதாக பயணம் செய்பவர்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பயணம் செய்யும் பெங்களூருவாசிகளுக்கு ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இறங்கியதும் கூடுதலாக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். குறுகிய தூரத்திற்கே அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நிறைய இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் நாம் பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்து விடுவோமே தவிர எங்கு இதுபற்றி புகார்அளிக்கலாம் என்பது தெரியாது.

ஒரு சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் பற்றி புகார் அளிக்க யாரை அணுகுவது என தெரியாமல் காவல் நிலையத்தை ஒருவர் நாடியுள்ளார் .அதற்கு பதில் அளித்த காவல்துறை ஒரு எண்ணை பதிவிட்டு இந்த எண்ணை அழைத்து ஆட்டோ தொடர்பான புகார்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தது . இது பற்றி டுவிட்டரிலும் தகவல் தெரிவித்துள்ளது.

ஆட்டோ கட்டணங்கள் பற்றிய புகார் அளிக்க ஐ.வி.ஆர்.எஸ். எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 080-22868550 / 22868444 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ஆட்டோ ரிக்‌ஷாவின் எண்ணை பதிவு செய்து இடம் , நேரம் , தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரி ஏற்றிக் கொள்ள மறுப்பு தெரிவித்தாலும் புகார்களை தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இருந்தாலும் ஐ.வி.ஆர்.எஸ். புகாரை எடுக்கவில்லை என ஒரு பயனர் புகார் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் ஆட்டோ கட்டணம் 30 முதல் 2 கி.மீக்கு 25 ரூபாய என்றடிப்படையில் 13லிருந்து 15 ரூபாயாக உயர்த்தியது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலித்ததால் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Post

4ஜி சிம் கார்டுடன் மடிக்கணினி..!! விலை இவ்வளவுதானா? அம்பானியின் அசத்தல் திட்டம்..!!

Mon Oct 3 , 2022
4ஜி சிம் கார்டுடன் கூடிய மடிக்கணினியை ரூ.15,000 விலையில் விற்பனைக்கு விட முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையில் கொடிகட்டி பறந்து வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் குறைந்த விலையில் மின்னணு சாதனங்களை சந்தைப்படுத்தும் ஜியோ நிறுவனம். தற்போது புதிதாக மடிக்கணினி ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான குவால்காம் மற்றும் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து மடிக்கணினியை […]

You May Like