’பிரதமரை போல் முதல்வர் ஸ்டாலினால் ரோடு ஷோ நடத்த முடியுமா’..? அண்ணாமலை சவால்..!!

பிரதமரின் உழைப்பையும், முதல்வரின் உழைப்பையும் பாருங்கள் யார் களத்தில் நின்று மக்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்துக்கு வருகிறார். நாளை மதியம் அமித் ஷா, டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவரின் வருகை உறுதி செய்யப்பட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

முதல்வர் களத்துக்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதையே முழு நேர பணியாக வைத்திருக்கிறார்கள். முதல்வர் வீதிக்கு வந்தால் மக்கள் அவர் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். முதல்வர் வீதி வீதியாக வர வேண்டும். ஆனால், அவர் வருவதில்லை. முதல்வரை ரோடு ஷோ வர சொல்லுங்கள் பார்க்கலாம். தமிழகத்தின் ஒரு நகரத்தை தேர்ந்தெடுத்து 10 கிலோமீட்டர் வரை அவரே ஒரு ரோடு ஷோ வரட்டும். எத்தனை பேர் முதல்வரை காண வருகிறார்கள் என்பதை பார்க்கலாம், நான் சவால் விடுகிறேன்.

Read More : TVK Vijay | ’திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’..!! நடிகர் விஜய் அறிக்கை..!! உண்மை என்ன..?

Chella

Next Post

கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Wed Apr 3 , 2024
ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் (EPO) காப்புரிமையை மறுத்தது தொடர்பான தகவலை வெளியிடத் தவறியதற்காக  கூகுள்  நிறுவனத்துக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது குறித்த மேல்முறையீட்டை மனுவையும் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தவறான உண்மைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது தொடர்பாகவும், ஐரோப்பிய காப்புரிமை அலுவலகம் (EPO) காப்புரிமையை மறுத்தது தொடர்பான தகவலை வெளியிடத் தவறியதற்காகவும் கூகுள் (Google) நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  EPO விண்ணப்பம் கைவிடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட காப்புரிமைக்கான […]
அடுத்த ஆப்பு..!! மூத்த நிர்வாகிகளின் போனஸில் கை வைத்த கூகுள்..!! வெளியான ஷாக்கிங் நியூஸ்..!!

You May Like