அதிமுக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன, திமுக கூட்டணி கொள்கை கூட்டணி.. திமுக அரசு சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். சொன்னதை செய்த கலைஞரின் மகனாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளது.. 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடுத்து மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் திட்டங்களை கொண்டு வந்தவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
விடியல் பயண திட்டம், மகளிர் உரிமை தொகை செயல்படுத்தப்பட்டது., காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை.. ஆனால் இந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்..
பொங்கல் பண்டிகைக்கு ரூ.3000 கொடுத்தோம்.. மகளிர் உரிமை தொகையை நிறுத்தப் பார்த்தார்கள்.. 3 மாத தொகையையும், கோடைகால நிதியாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 கொடுத்தோம்..
திராவிட மாடல் ஆட்சியில் உருவான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும்.. அதற்காக தான் 2026 தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார்.. இல்லத்தரசிகளுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ.8000 கூப்பன் தான் சூப்பர் டூப்பர் வாக்குறுதி.. இந்த திட்டத்தில் வீட்டுக்கு தேவையான பொருளை உங்கள் விருப்பப்படி வாங்கலாம்.. அதனால் தான் இந்த திட்டத்தை பெண்கள் வரவேற்கின்றனர்..
திமுக செய்த சாதனை திட்டங்களை பட்டியலிடுவது போல் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல முடியுமா..? தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்ன திட்டங்களை நிறைவேற்றவில்லை.. தனது 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய அதிமுகவுக்கு இந்த முறையும் படுதோல்வியை தான் நீங்கள் தர வேண்டும்..
நான் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கு ஒரு ஓபன் சேலஞ்ச் பன்றேன்.. தமிழ்நாட்டுக்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் மும்மொழி கொண்டு வருவோம் என்று பிரச்சாரம் செய்ய முடியுமா? உங்களுக்கு யாருக்காவது தைரியம் இருக்கா?
எடப்பாடி பழனிசாமி உங்கள் மானம், வெட்கம், சூடு சொரணை இருந்தால் மும்மொழி கொள்கை தொடர்பான தர்மேந்திர பிரதானின் கருத்துகளை கண்டித்து அதனை திரும்ப பெற முடியுமா? தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற துடிக்கும் பாஜக கூட்டணியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.. பாஜகவின் டப்பா எஞ்சினுக்கு முன்னாடி நம்ம தமிழ்நாடு சூப்பர் ஃபாஸ்ட் அணி ஒருபோதும் தலைகுனியாது..அதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..



