உடல் எடை சட்டுனு குறையனுமா?… இந்த ஒரு பானம் போதும்!… கட்டாயம் ட்ரை பண்ணுங்க!

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய பானத்தை பார்க்கலாம்.


இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை மற்றும் தொப்பை. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பலரும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருசில பானங்கள் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் தேங்கி இருக்கும், அதிகபடியான கொழுப்புகளை
கரைத்து, விரைவில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இன்று நாம் உடல் எடை குறைப்பதற்கான ஒரு அற்புதமான பானத்தை பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் இந்த பானத்தை பயன்படுத்தி உள்ளனர். எலுமிச்சையில் வெல்லம் கலந்து குடித்தால் வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்புகள் விரைவில் கரைந்துவிடும். தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன். வெல்லம் – ஒரு டீஸ்பூன். வெதுப்பான நீர் – ஒரு டம்ளர்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி வெதுவெதுப்பாக சூடாக்கி இறக்கி கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால் பானம் தயாராகிவிடும். தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக வெறும் வயிற்றில்
இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்.

1newsnationuser3

Next Post

7000-ற்கும் மேற்பட்ட காலியிடங்கள்...! தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு...! நாளை முதல் தொடக்கம்...!

Wed May 3 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ SSC-CGL. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 7,500 -ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ பி மற்றும்‌ குரூப்‌ சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இன்று […]
Tn Goverment College school

You May Like