மாதச் சம்பளம் 32,000ரூபாய்… பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஓஎம்எல்சி நிறுவனத்தில் 500 காலியிடங்கள்!

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் என்னும் நிறுவனமானது வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வளைகுடா நாடான குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளுக்கான  வேலை வாய்ப்புகளில்  500 பேர் தேவைப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள்  ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் இன் இணையதளத்தின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும் இதற்கான தேர்வு  நேர்காணல் முறையில் நடத்தப்படும் எனவும் அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை விண்ணப்பிக்கும் நபர்கள்  குறைந்தபட்சம் 30 வயதிலிருந்து அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இதற்கான கல்வி தகுதி  எஸ்எஸ்எல்சி ஆகும்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023  ஆகும். இந்த வேலைக்கான ஊதியமாக  29,500-ல் இருந்து 32,000 வரை அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து விபரங்களும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  அனைத்து விபரங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த செய்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் சென்று  சம்பளம் வயதுவரம்பு  தகுதி  மற்றும் அனுபவம்  போன்றவற்றிற்கான தகவல்களை சரி பார்த்து அந்த இணையதளத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அயல் நாட்டில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களும் தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்திற்கான முகவரி: omcmanpower.com

Baskar

Next Post

பிஎம் கிசான் திட்டம்..!! ரூ.8 ஆயிரமாக உயர்கிறதா..? விவசாயிகளே செக் பண்ணிக்கோங்க..!!

Wed Feb 8 , 2023
பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பிஎம் கிசான் திட்டப்பட்டி, முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் […]
பிஎம் கிசான் திட்டம்..!! ரூ.8 ஆயிரமாக உயர்கிறதா..? விவசாயிகளே செக் பண்ணிக்கோங்க..!!

You May Like