எடப்பாடியை தவிர வேறு தொகுதியில் நின்று உங்களால் ஜெயித்து காட்ட முடியுமா? இபிஎஸ்-க்கு விஜய் சவால்..!

1332588

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விஜய் பதிலடி கொடுத்தார்.. பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று விமர்சித்த இபிஎஸ்-க்கு விஜய் பதிலளித்தார்..


அப்போது பேசிய அவர் ” ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார் என்று, மற்றும் பலர் கட்சியில் ஒருவர் இருக்கிறார்.. 10 முறை தோல்வி அடைந்து, இன்னும் திருந்தாமல் ஒருவர் இருக்கிறாரே.. அவர் சொல்கிறார்.. அய்யா அனுபவசாலி அவர்களே, தேர்தலின் போது சேலம் பக்கத்தில் இருக்கும் தொகுதியில் மட்டும் பதுங்கிக் கொள்ளாமல், தமிழ்நாட்டில் வேறு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று உங்களால் ஜெயித்து காட்ட முடியுமா? முதலில் உங்களால் அந்த தொகுதியில் நிற்க முடியுமா..? முதலில் அதை செய்துவிட்டு பின்னர் இந்த விஜய்யை பற்றி பேசுங்கள் சும்மா நசநசன்னு பேசிட்டு இருக்கீங்க.. சொந்த தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று நம்ம சின்னத்தையே திருடியவர் தானே..

அதனால் நம்ம மன்றத்தில் நீண்ட காலம் பல வருஷமாக பயணித்த சுயேச்சை வேட்பாளரின் சின்னத்தை நமது சின்னமாக ஆதரிக்கிறோம்.. அதனால் எடப்பாடி தொகுதி மக்களே, எடப்பாடி தொகுதியில் டிவி சின்னத்திற்கு ஓட்டுப் போடுவது விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுவது மாதிரி. எடப்பாடி தொகுதி அதை மறந்துடாதீங்க..

பாஜக தலைவர் ஒருவர் விஜய் நடிகர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.. ஆமாம் இந்த விஜய் நடிகன் தான்.. ஆனால் அரசியலுக்கு வந்த பின் நடிக்கவில்லை.. நீங்கள் எல்லோரும் நடிகர் என்று நான் சொல்லவா? ஊழலில் திளைத்திருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம். புதிதாக நல்லாட்சியை கொடுக்கக் கூடிய தவெகவை நாம் எல்லோரும் சேர்ந்து கொண்டு வருவோம்.. இது மாற்றத்திற்கான தேர்தல்.. ரெண்டு பேரையும் மாற்றி மாற்றி கொண்டு வருவது மாற்றம் கிடையாது.. இந்த தேர்தலில் 75 ஆண்டு கால பவளவிழாப் பாப்பாவையும், 50 ஆண்டுகால பல்லாக்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோம்..” என்று தெரிவித்தார்..

Read More : கருத்துக் கணிப்பு இல்ல.. கடுப்பில் விட்ட கணிப்பு.. கணிப்பாளர்களை ஒருமையில் சாடிய விஜய்..!

RUPA

Next Post

Rain Dreams: உங்கள் கனவில் மழையை கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா..?

Tue Apr 21 , 2026
Rain Dreams: Do you know what it means when you see rain in your dreams?
rain

You May Like