பாலியல் வன்கொடுமைக்கும், இளம் வயதினரின் உண்மையான காதல் வழக்குகளுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது..
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் சம்மத வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, நாட்டில் இருபாலர் பயிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இருப்பதைக் குறிப்பிட்ட நீதிபதிகள் “இப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகின்றனர்.. காதலிப்பது குற்றம் என்று உங்களால் கூற முடியுமா? இது போன்ற உண்மையான காதல் வழக்குக்கும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் செயலுக்கு இடையேயான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர்..
மேலும் “ உண்மையான காதல் வழக்குகள் இருக்கின்றன.. அவர்கள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்… இதுபோன்ற வழக்குகளை குற்றவியல் வழக்குகளைப் போலவே நடத்த வேண்டாம்.
சமூகத்தின் யதார்த்தத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பிறகு, பெண்ணின் பெற்றோரால் ஆண் துணை சிறைக்கு அனுப்பப்படுவதால், பொதுவாக தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனிக்க வேண்டும்.. இது சமூகத்தில் உள்ள கடுமையான யதார்த்தம், போக்சோ சட்டத்தின் கீழ் காதலர்கள் ஓடிப்போனதை மறைக்க வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன..” என்று தெரிவித்தனர்..
இது கடத்தல், அல்லது உண்மையான காதல் வழக்கா என்பதை உறுதிப்படுத்த காவல்துறை இந்த விஷயங்களை ஆராயும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்..
சமீபத்தில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ சம்மத வயதை 18 ஆக வாதிட்டது, இந்த முடிவு “வேண்டுமென்றே எடுக்கப்பட்ட, நன்கு பரிசீலிக்கப்பட்ட மற்றும் ஒத்திசைவான” கொள்கைத் தேர்வு என்று கூறியது, இது சிறார்களை பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாக்கும் நோக்கம் கொண்டது.
சம்மத வயதை நீர்த்துப்போகச் செய்வது அல்லது இளம் பருவ காதல் என்ற போர்வையில் விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவது சட்டப்பூர்வமாக நியாயமற்றது மட்டுமல்ல, ஆபத்தானது என்றும் மத்திய அரசு கூறியது.
இதனிடையே இளம் பருவ உறவுகளில் வயதுப் புள்ளியை உயர்த்தும் ஒரு தனி வழக்கில் எழுத்துப்பூர்வ பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி இந்த அளவை விட அதிக லக்கேஜ் எடுத்து சென்றால் அபராதம்..!