கேப்டன்சி ப்ளான்!… இந்த மனுசன் எங்கிருந்து தான் யோசிப்பாரோ?!… தோனியுடனான அனுபவத்தை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்!

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை எரிச்சலடையச் செய்யும் என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.


தோனியுடனான அனுபவம் குறித்து உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். தோனி மீது எரிச்சலாகவே இருக்கும். ஹேசில்வுட் வீசும் போது ஃபைன்லெக் திசையில் யாரையும் நிறுத்த மாட்டார். ஆனால் எனக்குத் தெரியும் ஹேசில்வுட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசுவார் என்று அப்படி வீசும் போது பாயிண்டில் பவுண்டரி விளாசலாம் என்று அடித்தால் டீப் பாயிண்டில் பீல்டரை நிறுத்தி கேட்ச் கொடுக்குமாறு செய்து விடுவார் தோனி.

அதாவது, நாம் எந்த பீல்ட் நிலையில் அடித்துப் பழக்கமில்லாதவர்களோ அதே இடத்தில் தோனி நம்மை அடிக்க வைத்து வீழ்த்தி விடுவார். பேட்டரின் எண்ணங்களுடன் விளையாடுபவர் தோனி. பேட்டரை வித்தியாசமாக யோசிக்க வைப்பார். அதே போல் பவுலர்களையும் வித்தியாசமாகச் சிந்திக்க வைப்பார். அதாவது விக்கெட் எடுக்கும் தெரிவைத் தவிர வேறு எதையும் ஒரு பவுலர் சிந்திக்காத வகையில் உங்களை யோசிக்க வைப்பார் தோனி. ஒரு முறை தேவ்தத் படிக்கல்லை அப்படித்தான் வீழ்த்த உத்தி வகுத்தார். தேவ்தத் படிக்கல் பிக்-அப் ஷாட் நன்றாக ஆடுபவர். தோனி என்ன சொன்னார் தெரியுமா, ஓஹோ பிக் அப் ஷாட்டா? அதை அவர் ஆடுமாறு செய்து விடுவோம் என்றார். பிறகு ஃபைன் லெக் பீல்டரை லெக் கல்லிக்குக் கொண்டு வந்தார். எங்கிருந்து அவருக்கு இப்படியெல்லாம் யோசனை வருகின்றது என்று நான் அசந்து போயிருக்கின்றேன்” என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

KOKILA

Next Post

காதலர்கள் என நினைத்து அண்ணன் - தங்கையை மரத்தில் கட்டிவைத்து அடித்த கிராம மக்கள்!... மத்திய பிரதேசத்தில் கொடூரம்!

Tue Apr 11 , 2023
மத்திய பிரதேசத்தில் காதலர்கள் என நினைத்து அண்ணன் – தங்கையை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து ஒரு மணி நேரமாக அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் காதலர்கள் என நினைத்து 2 பேரை அப்பகுதி மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கலாவதி மற்றும் ஞானவேல் என்று அடையாளம் காணப்பட்டது. […]
mp brother sister

You May Like