பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று மதியம் ஒரு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 24 பேர் காயமடைந்தனர்.. குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
உள்ளூர் ஊடகங்கள் வாகனத்திற்குள் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று தெரிவித்தன, ஆனால் அது குறித்து போலீசார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.. குண்டுவெடிப்பு நடந்த நீதிமன்ற வளாகம் வழக்கமாக விசாரணைகளில் கலந்து கொள்ள வரும் பார்வையாளர்களால் நிறைந்திருக்கும்.
டெல்லியில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட வெடிப்பு நிகழ்ந்த ஒரு நாளுக்குப் பிறகு சமீபத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் கடுமையான UAPA மற்றும் வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்க்வாவின் வானா நகரில் இராணுவத்தால் நடத்தப்படும் கல்லூரி மீது பாகிஸ்தான் படைகள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
ஒரு தற்கொலை கார் குண்டுதாரி மற்றும் ஐந்து பாகிஸ்தான் தாலிபான் போராளிகள் ஒரே இரவில் அந்த வசதியை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானிய தாலிபான், அல்-கொய்தா மற்றும் பிற தீவிரவாத குழுக்களின் மையமாக வானா நீண்ட காலமாகக் கருதப்படுகிறது.



